Theme Check

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளது..!!

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளது..!!

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளது..!!
X

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் 40% அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் சில்லறை பம்புகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் மொத்தமாக வாங்கப்படும் அரசு போக்குவரத்து கழகங்கள் உட்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ. 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

diesel-price-for-bulk-users-hiked

இந்த விலை அதிகரிப்பு காரணமாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நாள்தோறும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 15 - 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல் கொள்முதல் செய்து வருகின்றது.

சில்லறை விற்பனையில் 136 நாட்களாக விலையில் பெரும் அளவிலான மாற்றம் செய்யப்படவில்லை. 2008-ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவன போட்டியால், நாட்டில் உள்ள 1,432 பெட்ரோல் பம்புகளை மூடியது.

diesel-price-for-bulk-users-hiked

தற்போது மும்பையில் மொத்தமாக பயன்படுத்துவோருக்கு விற்கப்படும் டீசல் விலை லிட்டருக்கு 122.05 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பெட்ரோல் நிலையங்களில் 94.14 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது. இதுவே டெல்லயில் டீசல் விலை பெட்ரோல் நிலையங்களில் 86.67 ரூபாயாக உள்ள டீசல் விலை, தொழிற்துறையில் 115 ரூபாயாகவும் உள்ளது.

Next Story
Share it