Theme Check

சென்னையில் டைனோசர் திருவிழா!!

சென்னையில் டைனோசர் திருவிழா!!

சென்னையில் டைனோசர் திருவிழா!!
X

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி ஜுராசிக் உலகத்தை மக்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை சென்னை சென்டரில் நடைபெறும் இவ்விழா, ஜுராசிக் உலகின் அனுபவத்தை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த டைனோசர் கண்காட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் சுற்றித் திரிந்த விலங்குகளை இந்த திருவிழாவில் காட்சிப்படுத்துகிறார்கள். இந்தியாவில் குறைந்தபட்சம் 16 வகை டைனோசர் இனங்கள் வாழ்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

dinosur1

இந்த டைனோசர் திருவிழா 20 மீ உயரம் இருந்த பிராச்சியோசொரஸ், 15 மீ உயரம் இருந்த டைரனோசொரஸ் ரெக்ஸ் மற்றும் 10 மீ உயரம் இருந்த டிரைசெராடாப்ஸ் போன்ற ராட்சத உயிரினங்களின் இனங்களைக் பார்க்க மக்களுக்கு உதவும்.

இந்த வகையான கண்காட்சி குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும். குழந்தைகள், சிறுவர்கள் புதைபடிவ அகழ்வாராய்ச்சி, டைனோசர் உருவங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டைனோசர் திருவிழாவில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளின் குழந்தைகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it