கடைகளில் தக்காளி திருடிய டிப்டாப் இளைஞர்.. போலீசார் அதிர்ச்சி !!
கடைகளில் தக்காளி திருடிய டிப்டாப் இளைஞர்.. போலீசார் அதிர்ச்சி !!

தமிழகத்தில் தக்காளி விலை கிலோ நூறு ரூபாய் வரை சென்று தற்போது குறைந்து வருகிறது. எனினும் 50 ரூபாயை தாண்டியே நீடிப்பதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தக்காளியை ஒருவர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருடுபோனது. ஏற்கனவே விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், தக்காளி திருட்டு வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள மளிகை கடையில் வெளியே வைக்கப்பட்டிருந்த தக்காளி கிரேடு திருடுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தார்.

அப்போது, டூ வீலரில் வரும் டிப்டாப் இளைஞர் ஒருவர், யாரும் பார்க்காத நேரமாக, நைசாக தக்காளிகளை கிரேடுடன் திருடிச்செல்லும் காட்சி அதில் பதிவாகியிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்காளி விலை கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்படும் நிலையில் வாலிபர் ஒருவர் தக்காளிகளை கிரேடுடன் திருடிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

