அறையில் நடந்த விபரீதம்.. புதுப்பெண் தூக்கில் தொங்கினார் !!
அறையில் நடந்த விபரீதம்.. புதுப்பெண் தூக்கில் தொங்கினார் !!

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலக்கோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த மகேஸ்வரி (25) என்ற இளம்பெண்ணுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் அரசகுமார் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது, இதனையடுத்து பெற்றோர் முன்னிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும், கணவரும் வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக சென்னை சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் மனைவி கதவை திறக்காததால் அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பின்னர் அச்சமடைந்து கதவை உடைத்து குடும்பத்தினர் பார்த்துள்ளனர்.
அந்த அறையில் மகேஸ்வரி, தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த பாலக்கோடு காவல் துறையினர், மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணமான ஒன்றரை மாதத்தில், புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், தருமபுரி கோட்டாசியர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார். மேலும் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

