Theme Check

செல்போனால் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவன் !!

செல்போனால் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவன் !!

செல்போனால் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவன் !!
X

செல்போன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடினார்.

கேரளா மாநிலம் கொச்சியில், அசாமைச் சேர்ந்த தம்பதி பக்ரூதீன் என்பவர் தனது மனைவி கலிதாவுடன் வசித்து வந்தார். பக்ருதீன் அங்குள்ள ப்ளைவுட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்கு குடியேறிய சில காலம் ஒன்றாக மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். ஆனால், அதன் பின்னர் கணவன் - மனைவி இருவரும் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

police

அதுபோல இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் சென்று சமாதானம் செய்தனர். மேலும் வழக்கமான சண்டை என நினைத்து இருவரையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்த நிலையில், திடீரென மனைவி கலிதாவின் அலறல் சத்தம் கேட்டவுடன் பக்கத்துவீட்டார்கள் சென்று பார்த்தபோது கலிதா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
police
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். அதன்பேரில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான பக்ருதீனை தேடும் பணியை முடுக்கி விட்டனர். முதற்கட்ட விசாரணையில் கலிதாவுக்கும் பக்ருதீனுக்கும் செல்போன் பேசுவது தகராறு ஏற்பட்டு, அதன் முடிவாக பக்ருதீன் கலிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரியவந்தது. பக்ருதீன் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it