Theme Check

நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!!

நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!!

நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி!!
X

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன.

ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். தேர்தலுக்கு தயாராகுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

imran khan

இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரிப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து, 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரித்த துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

imran khan

இந்நிலையில், விசாரணைக்குப் பின் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட தடையில்லை என்றும் அறிவித்துள்ளது.

மேலும் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it