Theme Check

மதிமுகவை கலைத்து விடுங்கள்.. மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி..!

மதிமுகவை கலைத்து விடுங்கள்.. மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி..!

மதிமுகவை கலைத்து விடுங்கள்.. மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி..!
X

மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என 3 மாவட்ட செயலாளர்கள் மதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் கொள்கையை அடகுவைத்து திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வரும் கட்சிகளில் மதிமுகவும் ஒன்று.

அதன் பொதுச்செயலாளரான வைகோ, “பாமக நிறுவனர் ராமதாஸை போல் எனது குடும்பத்தினர் கட்சி பொறுப்புக்கு வர மாட்டார்கள்” என்று கூறி வந்தார்.

ஆனால், அவருடைய மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது. இது, மதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது. இதனால், மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், மதிமுகவை திமுக உடன் இணைப்பது குறித்து, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் மாவட்ட மதிமுக செயலாளர்கள் சிவகங்கையில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it