அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த மாவட்ட ஆட்சியர்..!
அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த மாவட்ட ஆட்சியர்..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதற்கு தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் வெளிவரும் புகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே காற்று மாசை குறைக்கும் வகையில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் வாரத்தில் ஒருநாள் அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்து மூலமாகவோ அல்லது சைக்கிள், மின்சார சைக்கிள் போன்றவற்றின் மூலம் அலுவலகம் வர வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமை மட்டும் அரசு ஊழியர்கள் வாகனங்களை கைவிட்டு சைக்கிள் மூலம் பணிக்குவர அறிவுறுத்தியிருந்தார்.இதனை செயல்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அலுவலகத்திற்கு இன்று காலை தனது சைக்களில் புறப்பட்டு சென்றார்.
அப்போது சாலையில் சைக்களில் சென்ற ஆட்சியரை பொது மக்கள் வியப்புடன் கண்டனர்.

