Theme Check

எல்லை தாண்டக்கூடாது.. மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..!

எல்லை தாண்டக்கூடாது.. மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..!

எல்லை தாண்டக்கூடாது.. மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..!
X

தடை காலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் இந்திய சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டிச் சென்று மீன் பிடிக்கக் கூடாது; தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தக் கூடாது” என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி முடிய மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்படும்.

இதில், நாட்டுப்படகுகள், பைபர் படகுகளைத் தவிர, விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதன்படி, விசைப்படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் விவரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற பிறகே கடலுக்கு செல்ல வேண்டும்.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது உயிர் காக்கும் கவச உடைகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

மீன்பிடி படகுகள் இந்திய சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது. தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொழில் செய்ய வேண்டும்” என்று நாகை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it