மதிமுகவை தாய் கழகமான திமுகவோடு இணைக்க வேண்டும் - மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி..!!
மதிமுகவை தாய் கழகமான திமுகவோடு இணைக்க வேண்டும் - மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி..!!

சிவகங்கையில் மதிமுகவின் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட கழக மதிமுக செயலாளர் செங்குட்டுவன், உயர்மட்ட குழு உறுப்பினர் மதுரை அழகு சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில் மதிமுகவில் இணைந்து கொள்கைக்காக 30 ஆண்டுகளாக கட்டி காத்து நடத்தி வந்த இந்த இயக்கத்தின் தலைமை குறுகிய மனப்பான்மையில் உள் நோக்கத்தோடு பயன்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில், அதிலிருந்து மீண்டு இந்த இயக்கத்தை தாய் கழகமான திமுகவோடு இணைத்து விட வேண்டும். அதன் மூலமாக ஆயிரக்கணக்கான இளைஞர்களை காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மனக்குமுறலை தெரிவிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தினோம் என்றனர்.
பின்னர் கூட்டாக செவந்தியப்பன் அளித்த பேட்டியில், மதிமுக தொடங்கியபோது இலங்கையையே பெற்றுத் தருவது போல பேசி, இந்த இயக்கத்தை கொண்டு சென்றவர் எந்த அடிப்படையான வேலைகளையும் செய்யாமல் ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை தொலைத்தவர். 30 ஆண்டுகாலம் கட்சிக்கு உழைத்து மிசாவில் கைதாகி தியாகம் செய்து கட்சிக்காகவே உழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை குறை கூறியவர்.
எந்த தியாகமும் செய்யாத, உழைப்பும் தராத தனது மகனை கட்சியில் கொண்டு வந்து இணைத்தது மூத்த நிர்வாகிகளுக்கு விருப்பமில்லை.
அதைத் தீர்ப்பதற்கு எத்தனையோ முறை பேசியும் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் அவரது மகனை திமுகவுடன் இணைப்பதாக பேசி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஒட்டுமொத்தமாக அனைவரின் விருப்பத்திற்கேற்ப மதிமுகவை திராவிட இயக்கத்தை வலுபடுத்திட திமுகவுடன் தங்களை இணைத்து கொள்ள முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

