பகல் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்லவேண்டாம் !!
பகல் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்லவேண்டாம் !!

கோடை தொடங்கியுள்ளதால் அதில் இருந்து உடலை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு பரிதுரைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர். மக்கள் பலரும் அதிகப்படியாக குளிரூட்டப்பட்ட நீர், குளிர்பானங்கள் குடிக்கின்றனர்; ஐஸ் கிரீம் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
வரும் நாட்களில், அதிக வெயில் நிலவும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடலை பாதுகாக்காவிட்டால் 'ஹீட் ஸ்ட்ரோக்', அம்மை, வயிற்றுப்போக்கு, ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். பகல் 12 முதல் 3 மணி வரை கடும் வெயிலில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது. உடலை காக்க தினமும், நான்கு முதல் ஐந்து லிட்டர் நீர் குடிக்க வேண்டும். மதிய நேர அதீத வெப்பத்தால் முதியவர்களுக்கு வெப்ப தாக்குதல் வர அதிக வாய்ப்பு உள்ளது.

தற்போது, வியர்க்குரு, காலில் பித்த வெடிப்பு, தோல் 'அலர்ஜி', வேநீர் கட்டி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க, சர்க்கரை, ஐஸ் போடாமல் பழச்சாறு குடிக்க வேண்டும். அதிக அளவு நீர்ச்சத்து உள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் குடிக்க வேண்டும்.
நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரல் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப்புண் குணமாகும்.
வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணையில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெயை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசி குளிக்கலாம். கோடை காலத்தில் இந்த முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கோடை மோசமானதாக இருக்கும் போது வறுத்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. ஆனால் அதை உணராமல் அடிக்கடி பக்கோடா, போண்டா, பஜ்ஜி என்று சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை மேலும் மோசமாக மாற்றுகிறது. வறுத்த உணவுகள் ஈரப்பதமான நாட்களில் சருமத்தை எண்ணெய் மிக்தாகி முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது. மேலும் செரிமான அமைப்பை தொல்லை செய்கிறது.
எளிதில் ஜீரணிக்க முடியாத உணவில் இதுவும் ஒன்று. கோடைகாலத்தில் அதிகமாக இறைச்சி எடுப்பது செரிமான அமைப்பின் அழுத்தத்தை அதிகரிக்க செய்யலாம். இதில் அதிக அளவு கொழுப்புகள் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது செரிமானத்தின் போது உடலை வெப்பமாக்குகிறது. வெப்ப நிலை அதிகரிப்பில் இந்த வகை உணவுகள் மேலும் உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது.

நண்பகல் நேரங்களில் வீடுகளில் சமைப்பதை தவிர்க்கவேண்டும். வீட்டின் கதவுகளை திறந்துவைட்டு காற்றோட்டமான சூழலை பேணவேண்டும். நண்பகல் நேரங்களில் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
newstm.in

