Theme Check

போலிகளை நம்பி பணத்தை இழக்கவேண்டாம்.. இந்தியா போஸ்ட் எச்சரிக்கை !!

போலிகளை நம்பி பணத்தை இழக்கவேண்டாம்.. இந்தியா போஸ்ட் எச்சரிக்கை !!

போலிகளை நம்பி பணத்தை இழக்கவேண்டாம்.. இந்தியா போஸ்ட் எச்சரிக்கை !!
X

பரிசுகள், சலுகைகள் வழங்குவதாகக் கூறும் போலி வலைதளங்கள் மற்றும் போலி யுஆா்எல் முகவரிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இந்தியா போஸ்ட் எச்சரித்துள்ளது.

இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்மைக்காலமாக, வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களின் மூலம் சில ஆய்வுகள், விநாடி-வினாடி வழியாக அரசு சாா்பில் பரிசுகள், மானியங்கள் வழங்கப்படுவதாக போலி யுஆா்எல் முகவரிகள் பரவி வருவது இந்தியோ போஸ்ட் கவனத்துக்கு வந்துள்ளது.

money

அதுபோன்ற பரிசளிப்பு நடவடிக்கைகளில் இந்தியா போஸ்ட் ஈடுபடவில்லை. எந்தவித மானியத்தையோ, ஊக்கத்தொகைகளையோ வழங்கவில்லை. இதுபோன்ற தவறான, போலியான குறுந்தகவல்கள் மற்றும் அறிவிப்புகளைப் பெறும் மக்கள் அதனை நம்ப வேண்டாம். இதை நம்பி பிறந்த தேதி, வங்கிக் கணக்கு எண்கள், தொலைபேசி எண்கள், பிறந்த இடம், ஒருமுறை வழங்கப்படும் கடவுச்சொல் (ஓடிபி) ஆகியவற்றைப் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

இத்தகைய போலி தகவல்களைப் பரப்புவோா் மீது இந்தியா போஸ்ட் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் இதுபோன்ற தவறான, போலியான குறுந்தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை நம்பி அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

money
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இந்த யுஆா்எல் முகவரிகள் மற்றும் வலைதளங்கள் போலியானவை என இந்தியா போஸ்ட் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஃபேக்ட் செக் பிரிவு அறிவித்துள்ளன, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it