என்னை சுட்டுடாதீங்க.. கழுத்தில் பதாகையுடன் வந்து சரணடைந்த கொள்ளையன்..!
என்னை சுட்டுடாதீங்க.. கழுத்தில் பதாகையுடன் வந்து சரணடைந்த கொள்ளையன்..!

உத்தரப் பிரதேச மாநிலம் பட்டன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்கன். பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அவரை போலீசார் தேடி வந்தனர்.
குறிப்பாக, கடந்த மாதம் 5-ம் தேதி வியாபாரி ஒருவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வழக்கிலும் ஃபர்கன் தேடப்பட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து, ‘ஃபர்கன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்’ என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போலீசார் தன்னை சுட்டுக் கொன்றுவிடலாம் என அஞ்சிய ஃபர்கன், நேற்று போலீசில் சரண் அடைந்தார்.
அப்போது அவர், ‘என்னை சுட்டுவிடாதீர்கள், போலீஸ் மீதான பயத்தால் நான் சரணடைகிறேன்’ என்று எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் அணிந்தபடி வந்து பிஹ்தா நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து ஃபர்கனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

