Theme Check

பேருந்தில் செல்போன் பயன்படுத்தாதீங்க, மீறினால்.. போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

பேருந்தில் செல்போன் பயன்படுத்தாதீங்க, மீறினால்.. போக்குவரத்து துறை எச்சரிக்கை..!

பேருந்தில் செல்போன் பயன்படுத்தாதீங்க, மீறினால்.. போக்குவரத்து துறை எச்சரிக்கை..!
X

வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனையும் மீறி செல்போன் பேசிக்கொண்டு சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது.

இதை தடுக்க பல வித கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில், தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளை மீறும் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
Share it