Theme Check

இதை மட்டும் செய்யுங்க.. அரசியலில் ஏற்றம்தான்.. சசிகலாவுக்கு ஜோதிடர் அட்வைஸ்..!

இதை மட்டும் செய்யுங்க.. அரசியலில் ஏற்றம்தான்.. சசிகலாவுக்கு ஜோதிடர் அட்வைஸ்..!

இதை மட்டும் செய்யுங்க.. அரசியலில் ஏற்றம்தான்.. சசிகலாவுக்கு ஜோதிடர் அட்வைஸ்..!
X

அரசியலில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவதால், ஜோதிடர் சொன்ன ஆலோசனைப்படி தன் பெயரையும் வீட்டையும் மாற்ற சசிகலா முடிவு செய்துள்ளார்.

அதிமுகவை மீட்பதற்காக ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சசிகலா. ஆனால், அவர் எதிர்பார்த்தது போல அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அரசியலில் தான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவதற்கான காரணம் குறித்து ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் சசிகலா. அவரது ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, சில அறிவுரைகளை ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, சசிகலாவின் தந்தை விவேகானந்தன், தாயார் கிருஷ்ணவேணியின் பெயரை தன் பெயருக்கு முன் எழுத்துக்களாக போட்டு வருவதை மாற்ற வேண்டும்.

கணவர் நடராஜன் பெயரை 'இனிஷியல்' ஆக சேர்க்க வேண்டும். அதாவது, என்.சசிகலா என்றோ அல்லது சசிகலா நடராஜன் என்றோ தன் பெயரை மாற்றினால் தான் சசிகலாவுக்கு அரசியலில் ஏற்றம் வரும் என, ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

தற்போது, சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலா குடியிருக்கிறார். அங்கு வாஸ்து தோஷம் இருப்பதால் வேறு வீட்டிற்கு உடனே குடியேற வேண்டும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

Next Story
Share it