Theme Check

இதை செய்யுங்க இல்லனா அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்..!!

இதை செய்யுங்க இல்லனா அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்..!!

இதை செய்யுங்க இல்லனா அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்..!!
X

உங்கள் ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் உங்கள் பான் கார்டு செயல் இழந்து விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பான் கார்டை வங்கி கணக்குடன் இணைக்க முன்னதாக அதிக அளவிலான கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அளிக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்க தவறினால், உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.

அந்த வகையில், வங்கிக்கணக்குடன் பான் கார்டை இணைக்கும் செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. எனவே எஸ்பிஐ, சேமிப்பு வங்கிக் கணக்குடன் உங்கள் பான் அட்டையை எவ்வாறு இணைப்பது என்பதை பார்க்கலாம்.

ஆன்லைன் மூலம் இணைக்கும் முறை:

  • எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங் போர்டல் மூலம் பான் இணைக்கப்படுகிறது. இதற்காக முதலில் www.onlinesbi.com தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • திரையின் இடது பேனலில் தோன்றும் “எனது கணக்குகள்” என்பதன் கீழ் “சுயவிவர-பான் பதிவுக்கு” செல்லவும்.
  • கணக்கு எண் மற்றும் பான் எண்ணைத் தேர்ந்தெடுத்து சமர்பிக்க வேண்டும்
  • உங்கள் கோரிக்கை இப்போது செயலாக்கத்திற்காக எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்.
  • உங்கள் கோரிக்கையை 7 நாட்களில் கிளை செயல்படுத்தும்.
  • அதன் நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

நேரடியாக எஸ்பிஐ கிளை மூலம் வங்கிக் கணக்குடன் பான் கார்ட் இணைக்கும் முறை:

  • உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் செல்ல வேண்டும்.
  • உங்கள் பான் கார்டின் நகலை எடுத்துச் செல்லவேண்டும்.
  • அதற்காக உள்ள கோரிக்கை படிவத்தை முறையாக நிரப்ப வேண்டும்.
  • இந்த படிவத்தை பான் கார்டின் ஜெராக்ஸ் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு, வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைப்பு கிளை மூலம் செய்யப்படும்.
  • இணைப்பின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.

நீங்கள் இன்டர்நெட் பேங்கிங்கில் மூலம் பதிவு செய்யவில்லை என்றால், டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பான் எண்ணையும் கணக்குடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it