Theme Check

பீஸ்ட் 2ஆவது சிங்கிள் எந்த பாடல் காப்பி தெரியுமா?

பீஸ்ட் 2ஆவது சிங்கிள் எந்த பாடல் காப்பி தெரியுமா?

பீஸ்ட் 2ஆவது சிங்கிள் எந்த பாடல் காப்பி தெரியுமா?
X

பீஸ்ட் திரைப்படத்தின் 2ஆவது சிங்கிள் ஜாலியோ ஜிம்கானா காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும், இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின. 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

beast 1

'பீஸ்ட்' படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்க்கானா' பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கு.கார்த்திக் வரிகளில் விஜய் பாடியுள்ளார். இதற்கான முன்னோட்ட வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் 2ஆவது சிங்கிள் ஜாலியோ ஜிம்கானா காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். அனிருத் அவரது பாட்டையே திருடி ஜாலியோ ஜிம்கானா பாடலை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

பேட்ட படத்தின் உல்லாலா பாடலையும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பீலா பீலா பாடலையும் மிக்சிங் செய்து ஜாலியோ ஜிம்கானா பாடலை உருவாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it