‘வலிமை’ வசூல் எவ்வளவு தெரியுமா..?: வதந்திக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் போனி கபூர்..!
‘வலிமை’ வசூல் எவ்வளவு தெரியுமா..?: வதந்திக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் போனி கபூர்..!

அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ‘வலிமை’ வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்து இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், ‘வலிமை’ திரைப்படத்தின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உரிமையை கைப்பற்றிய தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் உள்ளிட்டோர் ‘வலிமை’ நல்ல வசூலைக் கொடுத்தது என்று ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தனர்.
அதேநேரம், ‘வலிமை’ படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்தபோதே 224 கோடியை கடந்துவிட்டது என்றும், ‘வலிமை’ எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் மர்மமாகவே இருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதன்முறையாக வசூல் அப்டேட்டை வெளியிட்டு, ‘வலிமை’ வெற்றிப் படம் என்பதை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வலிமை’ நாளை (25ம் தேதி) ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், ‘வலிமை’ இதுவரை 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது என்று தெரிவித்து, ‘வலிமை’ வசூல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Tags:
Next Story

