பீஸ்ட் டிரெய்லரில் முகமூடி அணிந்துள்ள நபர் யார் தெரியுமா?
பீஸ்ட் டிரெய்லரில் முகமூடி அணிந்துள்ள நபர் யார் தெரியுமா?

பீஸ்ட் டிரெய்லரில் வில்லனின் முகம் மாஸ்க் அணிந்து காட்டப்பட்டிருந்த நிலையில், அவர் பிரபல மலையாள நடிகர் என்று கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை யூடிபில் பெற்று பீஸ்ட் ட்ரெய்லர் சாதனை படைத்தது.
பீஸ்ட் டிரெய்லரில் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சுனில் ரெட்டி போன்ற முக்கியமான நடிகர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்தனர்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">
படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரமாக காட்டப்பட்ட நபர் மாஸ்க் அணிந்து இருந்தார். அதனால் அது யார் என்பதே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்துள்ளது.
ஷைன் டாம் சாக்கோ சின்னச் சின்ன வேடங்களில் நடித்து மலையாளத்தில் கவனத்தை ஈர்த்தவர். பிறகு பிரதான வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பீஷ்மபர்வம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அவர் தான் பீஸ்ட் படத்தில் பிரதான வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. டிரெய்லரில் மாஸ்க் அணிந்தபடி வரும் வில்லன் அவர் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in

