Theme Check

சென்னை மேயர் பிரியாவின் கனவுத்திட்டம் என்ன தெரியுமா?

சென்னை மேயர் பிரியாவின் கனவுத்திட்டம் என்ன தெரியுமா?

சென்னை மேயர் பிரியாவின் கனவுத்திட்டம் என்ன தெரியுமா?
X

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 74வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான பிரியா, சென்னை மேயராக பதவி ஏற்றுள்ளார்.

இளவயது மேயர் என்பதால் நிர்வாகம் மற்றும் சீனியர்கள் மேலாண்மையில் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அனைத்து மேயர்களுக்கும் உரிய பயிற்சி வழங்கப்படும் என்று முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த சூழலில் சென்னை தரமணியில்வருமுன் காப்போம்என்ற முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடங்கி வைத்து பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, இந்த மருத்துவ முகாம் சென்னையில் மூன்றாவது இடமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.

mayor

ஏற்கனவே தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர்களால் கொளத்தூரில் மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பிறகு சோழிங்கநல்லூரில் முகாம் நடத்தப்பட்டது. தற்போது மூன்றாவது இடமாக தரமணியில் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு அனைத்து விதமான மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், டிபி மருத்துவர், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கின்றனர்.

mayor

இலவச ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் முகாமை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் என்ன மாதிரியான திட்டங்கள் போய் கொண்டிருக்கின்றன, நீங்கள் எதும் கனவு திட்டங்கள் வைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஒருவாரம் தான் ஆகிறது. திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இன்னும் சில நாட்கள் எடுக்கும். விரைவில் அதுதொடர்பான தகவல்களை தருகிறேன் என்று பிரியா பதிலளித்தார்.

newstm.in

Next Story
Share it