Theme Check

12 இடத்தில் கடித்து குதறிய நாய்.. மகன் பாசமாக வளர்த்த நாயால் உயிரிழந்த தாய் - வீடியோ !!

12 இடத்தில் கடித்து குதறிய நாய்.. மகன் பாசமாக வளர்த்த நாயால் உயிரிழந்த தாய் - வீடியோ !!

12 இடத்தில் கடித்து குதறிய நாய்.. மகன் பாசமாக வளர்த்த நாயால் உயிரிழந்த தாய் - வீடியோ !!
X

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் சுசிலா என்பவர் தனது மகன் அமித் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அமித் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார். மேலும் தனது வீட்டில் பிட்புல் மற்றும் லாப்ரடோர் என்ற இரண்டு நாய்களை அவர் வளர்த்து வருகிறார்.

அந்த இரு நாய்கள் வீட்டில் இருக்கும் சுசிலா மற்றும் அமித் உடன் செல்லமாகவே பழகி வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் அமித் காலையில் உடற் பயிற்சிக்காக வெளியே சென்றுள்ளார். இதனால் வீட்டில் அவரது தாய் ஆன சுசிலா மட்டும் தனியாக இருந்துள்ளார். பயிற்சி முடித்துவிட்டு அமித் வீட்டுக்கு வந்தபோதுதான் பெரும் அதிர்ச்சியும் சோகமும் காத்திருந்தது.

amith dog

வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் நாய், தனியாக இருந்தபோது சுசிலாவை கடித்துக் குதறியுள்ளது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். வெளியே சென்ற அவரது மகன் வந்து பார்த்தபோது சடலமாக தாய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் உடனே தாயை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் நாய் கடித்து குதறியதில் தான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

amith dog

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய் கடித்துள்ளதாக ஆன சுசிலாவின் உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அமித் தனது நாயை மாநகராட்சியின் நாய் பிடிக்கும் வண்டியில் விட்டுவிட்டார். தாயை கொன்ற நாய் எனக்கு வேண்டாம் என ஆத்திரத்தில் விட்டுவிட்டார்.


newstm.in

Tags:
Next Story
Share it