போலியான நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் !

போலியான நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் !

போலியான நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் !
X

உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் போலியான நிறுவனங்களை கண்டு ஏமாற வேண்டும் என்று காமராசர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக்கான சேர்க்கை மையங்கள் என்று சட்டவிரோதமாக விளம்பரப்படுத்திக் கொண்டு சில தனியார் நிறுவனங்கள் தேனியில் செயல்பட்டு வருகின்றன.

dsf

இவர்களுக்கு ஏற்கனவே மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் உள்ளவர்கள் வசதிக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரியில் மட்டும்தான் நடைபெற்று வருகிறது.

உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தையோ, அல்லது பல்கலைக்கழகத்தின் மாலைநேரக் கல்லூரியையோ (MKU - Evening College, Theni ) நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். போலியான சட்ட விரோதமான தனியார் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


newstm.in

Next Story
Share it