Theme Check

“அரசியலே வேண்டாம்…” - பாஜகவில் இருந்து தெறித்த பிரபல நடிகை!!

“அரசியலே வேண்டாம்…” - பாஜகவில் இருந்து தெறித்த பிரபல நடிகை!!

“அரசியலே வேண்டாம்…” - பாஜகவில் இருந்து தெறித்த பிரபல நடிகை!!
X

அரசியலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை, அரசியல் தனக்கானது இல்லை என்று கூறியுள்ள நடிகை குட்டி பத்மினி தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

நடிகை குட்டி பத்மினி, திரைப்படங்களில் குழந்தை நட்சத்தரமாக அறிமுகமாகி எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். நண்டு உட்பட பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

kutty-padmini

சின்னத்திரை தொடர்களையும் குட்டி பத்மினி தயாரித்து வருகிறார். பல ஆண்டுகளாக பாஜகவில் கட்சி பணியாற்றி வந்த குட்டி பத்மினி தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், பா...வில் 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

kutty-padmini 2

என் சொந்தப் பணிகள் அனைத்தும் மும்பையில் இருப்பதால், அரசியலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். நான் எப்போதும் பா.ஜக,வின் நலம் விரும்பியாக இருப்பேன்என்று கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it