ரஷ்யாவிடம் இதை வாங்கக்கூடாது.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!
ரஷ்யாவிடம் இதை வாங்கக்கூடாது.. இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் கட்டிடங்கள் இடிந்து உக்ரைனின் நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. சுமார் 50 லட்சம் மக்கள் அதிகளாக வெளியேறியுள்ளனர்.

எனினும் தாக்குதலை ரஷ்யா நிறுத்தவில்லை. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்திருகின்றன. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. தங்களுக்கு எதிராக பேசி வரும் நாடுகள் மீது ரஷ்யாவும் கடந்த மாதம் பொருளாதாரத் தடையை விதித்திருந்தது.
இந்த நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால், நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. அந்த வகையில், இந்தியாவுக்கு தற்போதைய சந்தை விலையை விட பேரல் ஒன்றுக்கு 35 டாலர் குறைவாக கச்சா எண்னெய்யை ரஷ்யா விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அதாவது, தற்போதைய சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டிய நேரமிது, என அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ தெரிவித்துள்ளார். மேலும் தடைகளை மீறும் நாடுகள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
newstm.in

