தேவையில்லாம இதுல தலையிடாதீங்க.. திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை..!
தேவையில்லாம இதுல தலையிடாதீங்க.. திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை..!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (10-ம் தேதி) மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; “சுமார் 500 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு அதை தடை செய்ய முயற்சி செய்தது. அதைக் கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம்.

ஆதீனங்கள் விவகாரத்தில் தேவையற்ற தலையீட்டை அரசு தவிர்க்க வேண்டும். மதம், கோயில் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யார் தவறு செய்தாலும், அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்.
மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சியில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கையெழுத்திட்டது திமுக. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பீட்டு தொகை வழங்கிய அரசு அதிமுக அரசுதான்” என்று அவர் கூறினார்.
Next Story

