இனி மாஸ்க் போட்டாலும் கவலை வேண்டாம்.. அறிமுகமானது புதியவகை மாஸ்க் !!
இனி மாஸ்க் போட்டாலும் கவலை வேண்டாம்.. அறிமுகமானது புதியவகை மாஸ்க் !!

கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி விவரிக்க முடியாத பாதிப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திவிட்டது. தற்போது அதில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் அடுத்தடுத்து திரிபு உருவாகி வருகிறது. தற்போது புதிய வகை கொரோனா சீனா, அமெரிக்காவில் மிரட்டி வருகிறது.
இந்தநிலையில், கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் முக்கியம் என தொடக்க நாளில் இருந்தே உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது. அந்த வகையில் மாஸ்க் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ‘CeeMee’ என்ற நிறுவனம் டிரான்ஸ்பரண்ட் மாஸ்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாஸ்க் அணிந்துள்ளவரின் முழு முகமும் டிரான்ஸ்பரண்டாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்த மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இதன்மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக CeeMee தெரிவித்துள்ளது.
லிப் ரீட் செய்ய, கண்ணாடி அணிந்தாலும் அது பூத்து போக செய்யாத (Fog) வகையிலும், ஸ்மார்ட் போனில் Face ஐடியை அன்-லாக் செய்ய என பல்வேறு அம்சங்களுடன் இந்த மாஸ்க் சந்தைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த மாஸ்க் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல். மொத்தத்தில் இந்த மாஸ்க் மூலம் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் தெளிவாக தெரியும். N98.4 தர டிஸ்போஸபிள் ஃபில்டர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. முக்கிய ஆன்லைன் வணிக மையமான அமேசான் தளத்தில் இந்த மாஸ்க்கின் விலை 2990 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
newstm.in

