Theme Check

வரதட்சணை கொடுமை… பேரன், மருமகளுக்கு தீ வைத்த மாமனார்!!

வரதட்சணை கொடுமை… பேரன், மருமகளுக்கு தீ வைத்த மாமனார்!!

வரதட்சணை கொடுமை… பேரன், மருமகளுக்கு தீ வைத்த மாமனார்!!
X

தேனி மாவட்டம் கம்பம் அருகே வரதட்சணை கொடுமையை தொடர்ந்து பேரன், மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மாமனார் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகப்பிரியா என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அருண் பாண்டியனின் தந்தை பெரியகருப்பன், மருமகள் சுகப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து பிரச்னை செய்து வந்துள்ளார்.

dowry

அந்த வகையில் நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு பெரியகருப்பன், வரதட்சணை கேட்டு தகராறு செய்யவே அவருக்கும், மருமகள் சுகப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திடீரென பெரியகருப்பன் மண்ணெண்ணெய்யை எடுத்து ஒரு வயது குழந்தையான பேரன் மீதும், மருமகள் மீதும் தீ வைத்தார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தான்.

arrest

சுகப்பிரியா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் பெரியகருப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it