Theme Check

வரதட்சணை கொடுமை… மகனை கொன்று தாய் தற்கொலை!!

வரதட்சணை கொடுமை… மகனை கொன்று தாய் தற்கொலை!!

வரதட்சணை கொடுமை… மகனை கொன்று தாய் தற்கொலை!!
X

கணவனின் குடும்பத்தார் வரதட்சணை கொடுமை செய்து வந்தால், பெண் 5 வயது குழந்தையை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் ஹளரஹள்ளி கிராமத்தை சேர்ந்த செண்னே கவுடா - நவலதா (26) தம்பதிக்கு 5 வயதில் அஜ்மன் குமார் என்ற மகன் இருந்தார். திருமணத்தின் போது, நவலதாவின் பெற்றோர் செண்னே கவுடா குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு செண்னே கவுடா, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், அவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நவலதா, மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

ka suicide

அப்போது, தோட்டத்தில் இருக்கும் பண்ணைக்குட்டைக்கு சென்று மகனை வீசி கொலை செய்தார். பின்னர், தானும் அதில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்த போலீஸார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இருவரின் உடலையும் மீட்டனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நவலதாவின் கணவர் செண்னே கவுடா, அவரின் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it