Theme Check

பாடத்தை எளிதாக புரிய வைக்க ஆசிரியையின் வியத்தகு முயற்சி.. கவரும் கோமாளி வேடம் !!

பாடத்தை எளிதாக புரிய வைக்க ஆசிரியையின் வியத்தகு முயற்சி.. கவரும் கோமாளி வேடம் !!

பாடத்தை எளிதாக புரிய வைக்க ஆசிரியையின் வியத்தகு முயற்சி.. கவரும் கோமாளி வேடம் !!
X

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகேயுள்ள மாத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கணித ஆசிரியராக யுவராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். கணக்கு பாடம் என்றால் தெறித்து ஓடும் மாணவர்கள், இவரது வகுப்பு என்றால் உற்சாகமாக பள்ளிக்கு செல்வர்.

காரணம் என்னவென்றால், சிறு குழந்தைகளுக்கு பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லிக்கொடுத்து பாடம் கற்பிக்கும் முறைதான். 8,9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே யுத்தியை கையாண்டு வருகின்றார். அவர்களுக்கு புரியும் விதமாக கணித மேதை ராமானுஜர், மனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவி என புதுப்புது வேடமிட்டு, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, கதை சொல்லி பாடம் எடுத்து வருகிறார்.

knc teacher

இது குறித்து அவர் கூறுகையில், "மாணவர்களுக்கு கற்றுக் கொள்ள எப்பொழுதும் ஆர்வம் இருந்து கொண்டு தான் இருக்கும், அதனால் நாம் தான் அவர்களுக்கு பிடிப்பதை போன்று கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்வார்கள். கணக்கு பாடத்தை எளிதாக புரிய வைக்க தினசரி ஒரு வேடமிட்டு வருகிறேன், என்றார்.

மேலும் மாணவர்களை கவர கோமாளி வேடம் அணிந்தும் அவர்களுக்கு புரியும் வகையில் பாடங்களை பயிற்றுவித்து வருகிறார். ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை யுவராணியின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it