Theme Check

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்..!!

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்..!!

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்..!!
X

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அதன்படி, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

draupadi-murmu

இந்நிலையில், பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்தார்.

Yashwant-singh

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்த இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

Tags:
Next Story
Share it