பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகையாற்றில் கம்பீரமாக இறங்கிய கள்ளழகர்.. பக்தர்கள் பரவசம் !!

பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகையாற்றில் கம்பீரமாக இறங்கிய கள்ளழகர்.. பக்தர்கள் பரவசம் !!

பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகையாற்றில் கம்பீரமாக இறங்கிய கள்ளழகர்.. பக்தர்கள் பரவசம் !!
X

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று பச்சை பட்டுடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி விழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது.

azhakar

விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம், தேர்திருவிழா ஆகியவை முடிவுற்ற நிலையில், பக்கதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

azhakar

அதன்படி, கள்ளழகர் இன்று பச்சைப்பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளினார். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர். பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாளித்தார். கள்ளழகர் பச்சை பட்டுடன் எழுந்தருளியதால் இந்த ஆண்டு மக்களின் வாழ்கை பசுமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Next Story
Share it