குடிகாரர்கள் அதிர்ச்சி.. அடுத்த வாரத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல் !
குடிகாரர்கள் அதிர்ச்சி.. அடுத்த வாரத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல் !

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது 17 ஆம் தேதி காலை பத்து மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான 22ஆம் தேதியன்று, வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பிப்ரவரி மாதத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நாளில் பிரச்சனைகள், வன்முறைகளை ஏற்படுவதை தடுக்கவே தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in

