தமிழகத்திற்கு வறட்சியே.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்திற்கு வறட்சியே.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று முதல், வரும் 10-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இன்று (7-ம் தேதி) முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

