Theme Check

நட்சத்திர விடுதியில் போதை விருந்து.. பிரபல நடிகரின் மகன் கைது..!

நட்சத்திர விடுதியில் போதை விருந்து.. பிரபல நடிகரின் மகன் கைது..!

நட்சத்திர விடுதியில் போதை விருந்து.. பிரபல நடிகரின் மகன் கைது..!
X

பெங்களூரு நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்தில் பங்கேற்றதாக ஹிந்தி நடிகர் சக்தி கபூர் மகன் நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் போதை மருந்து விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அத்துடன் நட்சத்திர விடுதியில் விருந்தில் பங்கேற்ற 35 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில், பிரபல ஹிந்தி நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகருமான சித்தாந்த் உட்பட 5 பேர் போதை மருந்து உட்கொண்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story
Share it