Theme Check

குடிபோதையில் மோதிய தந்தை, மகன்.. சமாதானம் செய்த சித்தப்பா அடித்துக்கொலை !!

குடிபோதையில் மோதிய தந்தை, மகன்.. சமாதானம் செய்த சித்தப்பா அடித்துக்கொலை !!

குடிபோதையில் மோதிய தந்தை, மகன்.. சமாதானம் செய்த சித்தப்பா அடித்துக்கொலை !!
X

குடிபோதையில் அப்பா, மகன் சண்டை போட்டதை சமாதானம் செய்ய சென்ற சித்தப்பாவை உதைத்ததில் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மேலப்பாலையூர் மில் தெருவை சேர்ந்தவர் குமார் (52). இவரது வீட்டின் அருகேயே சகோதரன் ஜெயபால் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ஜெயபாலுக்கும், அவரது மகன் பிரபாகரனுக்கும் அவரது வீட்டில் குடிபோதையில் பயங்கரமான சண்டை நடந்து கொண்டிருந்தது.

fds

இதனை அறிந்த குமார், அங்கு சென்று அவர்களை ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று சமாதானம் செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் பிரபாகரன் (29) தனது சித்தப்பா குமாரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் குமார் மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குமாரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில், சித்தப்பாவை தாக்கி கொலை செய்ததாக பிரபாகரனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். சண்டையை சமாதானம் செய்ய சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it