Theme Check

குடிபோதையில் தகராறு – இளைஞர் வெட்டிக் கொலை!!

குடிபோதையில் தகராறு – இளைஞர் வெட்டிக் கொலை!!

குடிபோதையில் தகராறு – இளைஞர் வெட்டிக் கொலை!!
X

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக நகர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் சடலத்தை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்து கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (38) என்பது தெரியவந்தது.

zakir

சென்னையில் பேட்டரி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

விசாரணையை துவங்கிய 2 மணி நேரத்தில் கொலைக் குற்றவாளிகளான ஷாலேஷா (23), கமலேஷ் (25) ஆகிய இருவரையும், நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

murder

உயிரிழந்த ஜாகீர் உசேன், நேற்றிரவு குற்றவாளிகள் இரண்டு பேருடன் மது அருந்தியுள்ளார். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் சேர்ந்து ஜாகிர் உசேனை வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it