எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்.. சந்திப்பாரா பிரதமர் மோடி?

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்.. சந்திப்பாரா பிரதமர் மோடி?

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்.. சந்திப்பாரா பிரதமர் மோடி?
X

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான பின் முதல்முறையாக டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் நேரம் ஒதுக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி இருவரையும் சந்திக்கலாம் என கூறப்படுகிறது. இல்லையெனில் அவர் போன வேகத்தில் திரும்புவார். அதேநேரத்தில், இந்த பயணம் மரியாதை நிமித்தமான பயணம். இதில் அரசியல் இல்லை என்று ஒரு தரப்பினர் மூலம் கூறப்படுகிறது. அதன்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடக்கிறது. இதற்காக பல மாநில தலைவர்கள் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் செல்கிறார்கள். அதன் பொருட்டே எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.

dfg

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் மட்டுமே டெல்லி வர சென்று பாஜகவின் உதவியை நாடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக உதவியை பெரிதாக நாடவில்லை. இவர் டெல்லிக்கு செல்லவில்லை. தமிழ்நாடு பாஜகவின் தலையீட்டை இவர் தடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் எடப்பாடி முதல்முறையாக டெல்லி செல்கிறார். பாஜக - அதிமுக உறவு பற்றி இவர் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it