ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 10,12-ம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ்..!!
ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 10,12-ம் வகுப்புக்கு இணையான கல்வி சான்றிதழ்..!!

தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்புகளுக்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், தொழிற் பயிற்சி நிலையங்களில் ஓராண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையாகவும், 2 ஆண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையாகவும் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு முறையாக படித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். 10-ம் வகுப்பு முறையாக படித்து தொழிற் பயிற்சி நிலையங்களில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

