ஜெட் வேகத்தில் உயரும் முட்டை விலை… மேலும் உயர வாய்ப்பு!!
ஜெட் வேகத்தில் உயரும் முட்டை விலை… மேலும் உயர வாய்ப்பு!!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முட்டை விலையானது, 7 நாட்களில் 90 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து ஒரேநாளில் 35 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 60 காசுகளாக இருந்த நிலையில், 12ஆம் தேதி 25 காசுகளும், 14ஆம் தேதி 25 காசுகளும் உயர்ந்து 4 ரூபாய் 15 காசுகளாக விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் மீண்டும் 35 காசுகள் பண்ணை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
newstm.in

