Theme Check

இந்த பகுதிகளில் மது விற்பனை செய்யத் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

இந்த பகுதிகளில் மது விற்பனை செய்யத் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

இந்த பகுதிகளில் மது விற்பனை செய்யத் தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு..!!
X

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைந்தது.மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14,701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23,354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் வேகமாக நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில், பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1

இதேபோல, பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Next Story
Share it