Theme Check

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தபட்டிருந்தன. இதனிடையே, கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து நேற்று (22-ம் தேதி), வாக்கு எண்ணும் பணிகள் நேற்று முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4 வது வார்டு வாக்குச்சாவடி எண் 4 - AVல் நாளை 924-ம் தேதி) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரம் பழுதானதால், அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it