Theme Check

திருப்பூரிலும் திடீரென தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்... பொதுமக்கள் அலறல் !!

திருப்பூரிலும் திடீரென தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்... பொதுமக்கள் அலறல் !!

திருப்பூரிலும் திடீரென தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்... பொதுமக்கள் அலறல் !!
X

எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி தீப்பிடித்து எரிந்ததால் பேருந்து நிறுத்தம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் அருகே ஒருவர் தனது எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எலக்ட்ரிக் வாகனத்தில் தீடிரென புகை வருவதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு அந்த நபருக்கு தெரிவித்தனர். அதை தொடர்ந்து சுதாகரித்த வாகனத்தை ஓட்டி உடனடியாக சாலையோரம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அதோடுமட்டுமல்லாமல் வாகனத்தில் இருந்த பேட்டரியை லாவகமாக கழட்டி வெளியே எடுத்து வைத்தார்.

fsd

அடுத்த சில விநாடிகளில் அந்த பேட்டரி அதிக அளவிலான புகையை வெளியே கக்கியப்படி எரிய துவங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி பேட்டரியில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பெட்ரோலுக்கு மாற்றான பேட்டரி வாகனங்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. ஆனால், இந்தியாவில் அவ்வப்போது தொடர்ந்து பேட்டரி வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it