Theme Check

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை!!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை!!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட யானை!!
X

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இறந்து கிடந்த யானை, துப்பாக்கியால் சுடப்பட்டது உடற்கூராய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தது.

வனக் காப்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் கவிகார்த்திகா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை இறப்பு குறித்து விசாரணை நடத்தினார்.

elephant

அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவின் உதவியுடன் அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யானை துப்பாக்கியால் சுடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் சிறப்புப் படைகளை அமைத்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் தேடி வருகின்றனர்.

இறந்த யானையின் வயது சுமார் 23 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு தந்தங்களும் மீட்கப்பட்டது எனவும் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it