Theme Check

யானை தந்தங்கள் பறிமுதல்.. பிரபல நடிகர் மீது நடவடிக்கை..!

யானை தந்தங்கள் பறிமுதல்.. பிரபல நடிகர் மீது நடவடிக்கை..!

யானை தந்தங்கள் பறிமுதல்.. பிரபல நடிகர் மீது நடவடிக்கை..!
X

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக திகழும் மோகன்லாலுக்கு சொந்தமான கொச்சி, சென்னை, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 யானைத் தந்தங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர். பின் அந்த தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசியல் விருப்பம் எனக்கும் இல்லை – நடிகர் மோகன்லால் | Best actor, Actors,  Film producer
வனத்துறையினர், மோகன்லாலிடம் நடத்திய விசாரணையில், யானை தந்தங்களை யானை வளர்ப்பவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் கேரள அரசின் வாபஸ் மனுவை நிராகரித்து, மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க பெரும்பாவூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Next Story
Share it