போலி ட்விட்டர் ஐடிகளுக்கு முடிவு கட்டும் எலன் மஸ்க்..?
போலி ட்விட்டர் ஐடிகளுக்கு முடிவு கட்டும் எலன் மஸ்க்..?

ட்விட்டரில் தற்போது ஒரே நபர் பல்வேறு பெயர்களில் போலிக் கணக்குகளை தொடங்க முடியும். தனிமனிதரின் அடையாளங்கள் உறுதிசெய்யப்படுவதில்லை. இதனால் ஒரே நபர் 100 ட்விட்டர் கணக்குகள் கூட வைத்து லைக், ஷேர், ட்ரெண்ட் செய்ய முடியும். அதே போல் BOTs என்று சொல்லப்படும் செயலிகள் மூலம் ட்ரெண்ட் செய்யப்படுவதும் நடைமுறையில் உள்ளது. பணம் செலுத்தி BOTs கள் மூலம் பொதுமக்களின் உண்மையான கருத்துகள் மறைக்கப்படுவதாகவும் ட்விட்டர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் எலன் மஸ்க்,மக்களின் பேச்சுரிமைக்கான தளமாக ட்விட்டர் விளங்கும் என்று கூறியுள்ளார். பாஜகவினர் தான் அதிகளவில் போலிக் கணக்குகள் வைத்திருப்பதாகவும், பிரதமர் மோடியை பின் தொடரும் கணக்குகளில் பெரும்பாலனவை போலி என்றும் கூறப்படுகிறது. எலன் மஸ்க்கின் அதிரடித் திட்டத்தால், சமூகத்தளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
🚀💫♥️ Yesss!!! ♥️💫🚀 pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022