Theme Check

லஞ்ச ஒழிப்பு சோதனையால் பட்டாசு வெடித்து மகிழ்ந்த ஊழியர்கள்!!

லஞ்ச ஒழிப்பு சோதனையால் பட்டாசு வெடித்து மகிழ்ந்த ஊழியர்கள்!!

லஞ்ச ஒழிப்பு சோதனையால் பட்டாசு வெடித்து மகிழ்ந்த ஊழியர்கள்!!
X

சென்னையில் போக்குவரத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்ததை அடுத்து, ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வரும் நடராஜனின் அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் இருக்கிறது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது.

pattasu

இந்த சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 35 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 30 உதவியாளர்களிடமிருந்து தலா 5 லட்சம் வீதம் நடராஜன் லஞ்சமாக பெற்றதும் தெரியவந்தது.

போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்து கொண்டிருந்த போது, போக்குவரத்து ஊழியர்கள் வெளியே பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு நடந்தது.

இது சற்று வேடிக்கையாக இருந்தாலும்கூட, ஊழியர்களே இப்படி செய்தது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

newstm.in

Next Story
Share it