மீண்டும் என்கவுண்ட்டர்.. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து அதிர்ச்சி தகவல்!
மீண்டும் என்கவுண்ட்டர்.. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்து அதிர்ச்சி தகவல்!

ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் அவ்வப்போது அத்துமீறி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மீர்ஹாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தவகையில் நேற்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதனை தொடர்ந்து நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். எனினும், தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி தெரிவித்தார். அவர்களிடம் இருந்து 2 ஏ.கே ரைபிள்கள், 7 ஏ.கே மெகசின்கள், 9 கையெறி குண்டுகள் உள்ளிட்ட குற்ற செயல் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்ல உள்ள நிலையில், நேற்று நடந்த சண்டை காரணமாக பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
newstm.in

