Theme Check

அமலாக்கத்துறை அதிரடி.. சரவணா ஸ்டோர்ஸ், லாட்டரி அதிபர் சொத்துக்கள் முடக்கம்..!

அமலாக்கத்துறை அதிரடி.. சரவணா ஸ்டோர்ஸ், லாட்டரி அதிபர் சொத்துக்கள் முடக்கம்..!

அமலாக்கத்துறை அதிரடி.. சரவணா ஸ்டோர்ஸ், லாட்டரி அதிபர் சொத்துக்கள் முடக்கம்..!
X

தமிழகத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டின், சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் கோல்டு பேலஸ் கடைக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக, அமலாக்கத்துறையின் (Enforcement Directorate) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியன் வங்கியிடம் கடன் வாங்கி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பாக, பண மோசடி தடுப்புச் சட்டம் 2002-ன் (Provisions of Prevention of Money Laundering Act, 2002) கீழ், 234.75 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ரூ.258 கோடி சொத்துக்களை முடக்கிய நிலையில், லாட்டரி அதிபர்  மார்ட்டினின் மேலும் ரூ.19.59 கோடி சொத்துக்கள் முடக்கம்
அதேபோல், தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டினின் 173 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன. மேலும், மார்ட்டின் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிலம் மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ள’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it