பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. கணவர் யார் தெரியுமா..?
பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. கணவர் யார் தெரியுமா..?

பரத் நடித்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாம்னா காசிம் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை பூர்ணா.
இதையடுத்து, அருள்நிதி நடித்த ‘தகராறு’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’ உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘தலைவி’ படத்தில் கங்கனா ரனாவத்தின் தோழியாக நடித்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். ‘கந்தகோட்டை’, ‘துரோகி’, ‘ஆடு புலி’, ‘காப்பான், ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற சினிமா படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகை பூர்ணா தற்போது தனது திருமண அறிவிப்பை அறிவித்துள்ளார். சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை திருமணம் செய்ய உள்ளார்.

நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “பெற்றோரின் ஆதரவுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
சானித் ஆசிப் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜேபிஎஸ் குரூப் ஆஃப் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

