வேலை செய்யும் போதே உயிரை விட்ட என்ஜின் டிரைவர்..!!
வேலை செய்யும் போதே உயிரை விட்ட என்ஜின் டிரைவர்..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர்-கான்பூர் வழித்தடத்தில் ஹரிச்சந்திர சர்மா (45) என்ற இன்ஜின் பைலட் ரயிலை ஓட்டும் போது சுருண்டு விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கான்பூர் செல்லும் வழியில், கௌரிகஞ்ச் ரயில் நிலையம் அருகே, ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சர்மா சுருண்டு விழுந்தார்.உதவி இன்ஜின் பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சர்மா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story

